Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. மாந்திரீகவாதியின் வெறி செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதன்புரம்  பகுதியில் மாந்திரீக தொழில் செய்யும் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகுமார் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி நடந்துவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால்  அவரது தாயார் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால்  அந்த மாணவி வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் தனது தந்தையிடம் நடந்தவற்றை   கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மாணவியிடம்  தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகுமார் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமார் மற்றும் மாணவியின் தாயார் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |