Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக தூங்கிய பெண்….. கைவரிசையை காட்டிய காய்கறி கடை உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல்  பலாத்காரம் செய்ய முயன்ற  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடகம்பாடி கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தூங்கி  கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்து தப்பி வெளியே வந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார்.

ஆனால்  அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |