ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் மாவட்டத்திலுள்ள சிவ் கேத்ரா கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், ஓட்டு அளிப்பதற்காக அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் வைத்து அந்த சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி செல்போன் மூலமாக அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.சிறுமி மயங்கி விழுந்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.தேர்தலில் ஓட்டு அளித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் பெற்றோர், தன் மகளை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.சிறுமியை தேடி அலைந்தபோது அவர் காட்டில் மயங்கி கிடந்ததை கண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சிறுமியை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்.தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் யார் என்று தெரியாது என சிறுமி கூறியுள்ளார்.ஆனால் காவல்துறையினர் சில தடயங்களை வைத்து குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர். இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி சென்ற ஒருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.