ரேஷன் கடை ஊழியரின் செல்போனை திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் அன்னஞ்சி மேற்குத் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் நைசாக கணேசனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கணேசனின் வீட்டில் இருந்து வெளியே வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருடன் என கத்தியுள்ளனர்.
இந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த கணேசன் சிறுவனை விரட்டி மடக்கி பிடித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள உச்சம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் சிறுவனை கைது செய்து அவரிடம் இருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.