46 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் விமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விமல் தனது வீட்டை சீரமைக்க திட்டமிட்டு அதே பகுதியில் வசிக்கும் காண்டிராக்டரிடம் பணிகளை ஒப்படைத்துள்ளார். இதற்காக 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விமலின் வீட்டில் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது 46 பவுன் தங்க நகைகள் திருடு போனதை அறிந்து விமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் வேலைபார்த்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.