Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் நடந்த பராமரிப்பு பணி …. திடீரென கேட்ட பயங்கர சத்தம் ….விருதுநகரில் கோர விபத்து ….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது  பழைய வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் முருகன், சண்முகநாத பாண்டியன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. அங்கு  படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயம் அடைந்த 3 பேரையும்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரான சண்முகநாதனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |