Categories
சினிமா

வீட்டில் பணிபுரியும் ஊழியரின் இல்ல திருமண விழாவில் நடிகர் விக்ரம்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “சியான் 61” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்களின் அன்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். இதற்கிடையில் விக்ரம் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம் ஆகும்.

இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல்வேறு வருடங்களாக வேலை பார்த்து மறைந்தவர் ஒளிமாறன். இவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகனான தீபக்என்பவருக்கும், மண மகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடந்த தீபக் -வர்ஷினியின் திருமணத்தில் நடிகர் விக்ரம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அத்துடன் விக்ரம் ரசிகர்களும், ரசிகர்மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |