Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப்பாம்பு….. சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் கைது….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மண்ணுளிப் பாம்பை பிடித்து வைத்திருந்த குற்றத்திற்காக 2 நபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிநாதபுரம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருக்கிறார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ம் தேதி அரவிந்த்  வீட்டில் மண்ணுளிப்பாம்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி வனத்துறையினர் மண்ணுளி பாம்பை மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரவிந்த்தை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த விசாரணையின் போது அரவிந்தன் கரூரில்  பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கரூர்  சென்று ஓட்டலில் தங்கியிருந்த அரவிந்தன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வெங்கடரமணா ஆகிய 2 பேரையும்  கைது செய்தனர்.

Categories

Tech |