மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி. கள்ளிப்பட்டியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தென்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பாஸ்கர் வீட்டில் சுமார் 1,700 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாஸ்கரனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.