Categories
உலக செய்திகள்

வீட்டில் பற்றி எரிந்த தீ… உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு கிளி… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தபோது தனது உரிமையாளரை வளர்ப்பு கிளி ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டன் இங்குயென் என்பவர் வசித்துவருகிறார். அவர் கிளி ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து கொண்டிருக்கிறார். அந்த கிளிக்கு ஏரிக் என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து புகை கசிய தொடங்கியது. அதனை கண்ட கிளி, தனது உரிமையாளரை அவரின் பெயர் கூறி திரும்பத் திரும்ப அழைத்துள்ளது. உடனடியாக எழுந்து அவர் புகை வாசம் வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தனது கிளியை தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது வீடு தீப்பற்றி எரிந்தது அவருக்கு தெரியவந்தது.

அதன் பிறகு அவரின் பையை தூக்கிக்கொண்டு கீழ் தளத்திற்கு சென்று தப்பியுள்ளார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். ஆனால் திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது உரிமையாளரை கோர விபத்தில் இருந்து தக்க சமயத்தில் காப்பாற்றிய கிளிக்கி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |