செங்கல்பட்டு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து லட்சக்கணக்கில் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திம்மாவரம் பகுதியில் பிரவின்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரவின்குமார் தனது மனைவிக்கு உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள், 30 லட்சம் வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கேமராக்களை திருடிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்த பிரவின்குமார் திருடி சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.