வீட்டில் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரை தாக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமரகுரு-விஜயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் குமரகுரு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அவரது எதிர் வீட்டை சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கணபதி சிலருடன் சேர்ந்து குமரகுரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குமாரகுரு மற்றும் அவரது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது இதனை தடுப்பதற்கு வந்த மாரியப்பன் என்பவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர் . இதில் படுகாயம் அடைந்த குமாரகுரு, விஜயஸ்ரீ,மாரியப்பன் ஆகிய 3பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து குமரகுரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணபதி உள்ளிட்ட சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.