Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற நபர் கைது… 18 பாட்டில்கள் பறிமுதல்…!!

வேலூரில் மது பாட்டில்களை வீட்டில் மறைத்து வைத்து விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையினர் நேற்று முன்தினம் ஓல்டுடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.

இத்தகவலின் பேரில் அங்கு உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, உத்திர மாதா கோவில் தெருவில் வசித்து வந்த சண்முகம்(36) என்பவரது வீட்டில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்த 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |