Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்ட தம்பி….. “நண்பர்களுடன் அண்ணன் செய்த காரியம்”…. மருத்துவமனையில் தம்பி….!!!!!!

வீட்டில் மது குடித்ததை தம்பி தட்டி கேட்டதால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணன் கத்தியால் குத்தியதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரின் அண்ணன் ஹரிஷ் குமார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிஷ் குமார் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் வீட்டில் மது அருந்து கொண்டிருந்தார். இதை பார்த்த விஷ்ணு அண்ணனை தட்டி கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பின் ஹரிஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணுவை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் ஹரிஷ் குமார், அவரின் நண்பர்கள் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |