நெல்லையில் ஓட்டலினுடைய உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஹோட்டலை நடத்தி வரும் பக்ருதீன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் பக்ருதீனுக்கு தொழில்ரீதியாக நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு சென்ற அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.