திருமணமான பெண்ணை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் 25 வயது உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வான். சிறுவன் தானே என்று எண்ணி இந்தப் பெண்ணும் பேசி பழகி உள்ளார். இதையடுத்து ஒருநாள் அவரது மாற்றுத்திறனாளி கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்று விடவே, இதை நோட்டமிட்ட அந்த சிறுவன் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரின் வாயில் துணியை வைத்து கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அவரால் கத்திக் கூச்சல் போட முடியாததால் யாரும் அவரை காப்பாற்ற வரவில்லை. இதையடுத்து அந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வெளியூர் சென்றிருந்த கணவன் வீட்டிற்கு வந்த பின்பு நடந்த சம்பவம் அனைத்தையும் தெரிவித்துள்ளார். உடனே அப்பெண்ணின் கணவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, அந்த சிறுவன் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.