Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் கூலி தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மாலதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த மாலதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாலதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாலதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |