மின்வாரிய அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சபரி ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபரிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரி ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சபரி ராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.