வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக வீட்டுக் கடன்கள் மீது EBLR வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் மீதானEBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது EBLR வட்டி 0.50% உயர்த்தப்பட்டு 7.5% ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வீட்டு கடன் மீதான வட்டி அதிகரித்து உள்ளதால் வீட்டு கடன் இஎம்ஐ செலுத்துபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தை தணிப்பதற்காக இந்த மாதம் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த முடிவு செய்தது. இதையடுத்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததை தொடர்ந்து பல வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.