Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன்…. தீபாவளிக்கு சூப்பர் சலுகை…. SBI வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக் கடன் சலுகையை அறிவித்துள்ளது.அதன்படி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது . தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இருந்தாலும் இந்த சலுகையை பெற வேண்டும் என்றால் உங்களின் சிபில் ஸ்கோர் நல்ல அளவில் இருக்க வேண்டும் சிபில் ஸ்கோர் வைத்து தான் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும் . அதாவது உங்களின் சிபில் ஸ்கோர் 800 முதல் அதற்கு மேல் இருந்தால் வீட்டு கடனுக்கு 8.40 சதவீதம் வட்டி விதிக்கப்படும். சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால் 8.40 சதவீதம் வட்டி விதிக்கப்படும். சிபில் ஸ்கோர் 700 முதல் 749 வரை இருந்தால் 8 புள்ளி 55 சதவீதம் வட்டி விதிக்கப்படும். சிபில் ஸ்கோர் 699 வரை இருந்தால் வீட்டு கடன் வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என்ற எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |