ரிசர்வ் வங்கி அல்லது காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனம் கடன் பெறுவதற்காக காப்பீட்டை நீங்கள் வாங்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை. பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டாளர்களிடமிருந்து மட்டுமே காப்பீட்டை வாங்க வேண்டும் என வங்கிகள் வற்புறுத்த முடியாது. இருந்தாலும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை கேட்பது பொதுவான நடைமுறை தான். நீங்கள் அடமானம் வைத்த சொத்து மற்றும் கடன் நிதி நலனை பாதுகாக்க காப்பீடு அவசியம்.
அதிக வட்டி வசூலிக்கும் பல வங்கிகள் காப்பீடு வாங்க விதிவிலக்கு வழங்குகின்றன. வீடு சேதம் அடைந்தாலோ அல்லது கடன் வாங்கியவர் திடீரென உயிரிழந்தார் அதனால் ஏற்படும் அபாயத்தை சரி செய்ய நீங்கள் செய்யும் காப்பீடு பயன்படும். கடன் பெறுபவர்கள் தாங்களாகவே முன்வந்து சொத்து காப்பீட்டை வாங்குவது சிறந்த யோசனை. ஏனென்றால் இது உங்களுடைய நிதி நிலைக்கு மிகவும் நல்லது. வீட்டுக் காப்பீடு மிகவும் குறைவான தொகையை கொண்டது.
தீ விபத்து அல்லது இயற்கை சீற்றம் ஏற்படும்போது வீடு சேதம் அடைந்தால் நீங்கள் செய்த காப்பீடு மூலமாக அதனை ஈடு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் இந்த காப்பீட்டை நீங்கள் விரும்பும் நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொள்ள முடியும். அதை வங்கியிலிருந்து இருந்து மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டும் ஒரு வீட்டிற்கு வீட்டுக் காப்பீடு செலவு சுமார் 3500 மட்டுமே. எனவே வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் இன்சூரன்ஸ் செய்வது மிகவும் நல்லது.