அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவாக இருக்கும். அதில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வீடு கனவு வீட்டுக் கடன் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இருந்தாலும் வீட்டுக் கடன் என்பது நீண்டகால சுமையாக உள்ளது. ஏனென்றால் வீட்டு கடன் தொகையும் மிகப் பெரியது. அந்த கடனை திருப்பி செலுத்தும் காலமும் அதிகம்தான்.
வீட்டுக்கடன் மாத EMI தொகை அதிகம் என்பதால் மாதாந்திர சுமையும் அதிகம்தான். எனவே வீட்டு கடன் பெறுவதற்கு முன்பு குறைந்த வட்டிக்கு எந்த வகையில் கடன் கிடைக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு ஏதாவது ஒரு வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் Balance transfer மூலமாக குறைந்த வட்டிக்கு வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்களது மாத சம்பளத்தில் வீட்டுக் கடன் EMI எடுத்துக்கொள்ளும் பணத்தை குறைக்க முடியும்.
இந்தநிலையில் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா குறைந்த வட்டிக்கு வீட்டு கடன் வழங்கும் சூப்பர் சலுகையை தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடன்களுக்கு 6.75 சதவீதம் வட்டி விதித்திருந்தது. தற்போது 6.50% வட்டிக்கு வீட்டு கடன் வழங்கப்படும் என்று பேங்க் ஆப் பரோடா வங்கி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இருந்தாலும் இது ஒரு குறுகிய கால சலுகை மட்டுமே. அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு சலுகை கிடைக்கும். புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோர் மட்டுமில்லாமல் வேறு வங்கியில் இருந்து பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றுவோருக்கும் இந்த சலுகை பொருந்தும்.