ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹகிஸ் மீது பெயரிடப்படாத பிரிட்டிஷ் பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அதாவது சுற்றுலா நகரமான ஒஸ்தூனில் நடந்த கலை விழாவில் பங்கேற்பதற்காக இயக்குனர் இத்தாலியில் இருந்தபோது தனுடன் இருமுறை சம்மதிக்காமல் உடலுறவு கொண்டார் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ஹாகிஸ் ஜூன் 19ஆம் தேதி முதல் தெற்கத்தி இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாலியில் நீதிபதியின் தடுப்பு காவல் முடிவடைந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் பால் ஹகிஸ் விடுவிக்கப்பட்டார். ஹாகிஸ் மீதான விசாரணைய தொடரலாம் என்று வழக்கறிஞர் முடிவு செய்த நிலையில் ஹாக்கீசை வீட்டுகாவிலிருந்து விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.