Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?…. வீரமுத்துயார் சங்கத்தினரின் போராட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீர முத்தரையர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வீரமுத்தரையர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பொறுப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இறந்த ஒரு நிர்வாகி நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர் கே . கே செல்வகுமார் தலைமையில் இன்று ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் காவல்துறையினர் கே .கே. செல்வகுமாரை  வீட்டிற்கு சென்று அவரை ஊர்வலத்தில் கலந்து கொள்ள விடாமல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |