குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 4வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே மாத்தூர் தனியார் குடியிருப்பில் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தினேஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டிற்குள்ளேயே தினேஷ் மது அருந்தியதால் அவர்கள் இருவருக்கும் சண்டை முற்றி போனது. இதனால் மனமுடைந்த இலக்கியா நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் இலக்கியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.