Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் கேட்ட பாடல் சத்தம்… “கதவை தட்டிய எஸ்டேட் மேலாளர்”… உள்ளே சடலமாக கிடந்த தம்பதியர்.. தப்பிய உறவினருக்கு வலை..!!

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியினர். இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செம்மநத்தம் ஊராட்சியில் காரரா எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தனர். அங்கிருக்கும் பணியாளர்கள் குடியிருப்பில் இத்தம்பதியினர் பல மாதங்களாக வசித்து வந்த நிலையில் இவர்களது உறவினர் ஹைரா என்பவர் ஏற்காட்டிற்கு வந்து இவர்களது குடியிருப்பிற்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வாரமாக தங்கியிருந்துள்ளார்.

உறவினர்கள் என்ற காரணத்தினால் சமையலை ஒரே இடத்தில் செய்து சாப்பிட்டுள்ளனர். அதோடு மூன்று பேரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் மூவரும் நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு ஒலிபெருக்கி மூலம் ஹிந்தி பாடல்களை சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அவதிப்பட்ட அக்கம்பக்கத்தினர் எஸ்டேட் மேலாளருக்கு புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து மேலாளர் சுனில்குமார் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து குடியிருப்பின் உள்ளே இருந்த கோண்டாபகனை வெளியே அழைத்தார். ஆனால் யாரும் வெளியில் வராததால் வீட்டின் கதவைத் தட்டி பார்த்தார்.  அப்போதும் சத்தம் இல்லாததால் சந்தேகமடைந்த சுனில் குமார் மற்றவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.அங்கு கோண்டாபகன் தலையில் வெட்டப்பட்ட சுதிகேன்ஸ்  கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுனில்குமார் ஏற்காடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுடன் தங்கி இருந்த உறவினரான ஹைரா என்பவர் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |