13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த சோளம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு 13வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும் ,2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் பெற்றோர் இருவரும் விவசாய வேலைக்கு சென்றனர். வீட்டில் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பிகள் இருந்தனர். பின்னர் தம்பிகள் இருவரும் விளையாடச் சென்றனர்.
அதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டம் விட்ட அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து விட்டார்.அதனை எதிர்பார்க்காத பிரியதர்ஷினி அவரிடம் என்ன வேண்டும் என கேட்க அந்த இளைஞர் பிரியதர்ஷனிடம் திடீரென தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி கூச்சலிட்டார். அந்த இளைஞன் மறைத்து வைத்த கத்தரிக்கோலை எடுத்து பிரியதர்ஷினியின் கழுத்தில் குத்தினார். அதில் பலத்த காயமடைந்த பிரியதர்ஷினி ரத்தவெள்ளத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த இளைஞன் உடனே அங்கிருந்து தப்பி சென்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பிரியதர்ஷினி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின்உடலை பிரேதபரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள தொடக்கிய காவல்துறையினர் மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சோழம் பூண்டியில் 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.