வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. நாய் அதைக்கண்டு குரைத்துள்ளது. நாய் குறைக்கும் சத்தம் கேட்டு லட்சுமணனும் ஈஸ்வரியும் எழுந்து வந்து பார்த்த பொழுது பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆறு அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தார்கள்.
இதனிடையே நாய் மயங்கி விழுந்து உயிரிழ ந்துவிட்டது. பாம்பை வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் நாய் தடுத்த பொழுது பாம்பு கடித்து விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தன்னை வளர்த்தவர்களுக்காக பாம்பிடம் போராடிய நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.