காதலி அழைத்ததை நம்பி சென்ற காதலன் பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசத்தில் உள்ள தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத். இவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்த அவரது காதலி தனது வீட்டிற்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலில் அழைத்ததால் விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜயை எதிர்பார்த்தபடி காதலியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.
அவர் அங்கு செல்லவும் சரமாரியாக விஜய்யை தாக்கி கொலை செய்ததோடு சடலத்தை வெளியில் வீசி எறிந்தனர். மறுநாள் காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து விரைந்து வந்தவர்கள் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். முதற்கட்ட விசாரணையில் 5 பேரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.