Categories
உலக செய்திகள்

வீட்டுக்கு திரும்பிடேன்…. மருத்துவர்களுக்கு நன்றி…. ட்விட் செய்த டைகர் உட்ஸ்….!!

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கோல்ப் வீரர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ். இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும், மேற்கொண்ட சிகிச்சைகளை வீட்டிலிருந்து தொடர இருப்பதாகவும் ட்விட் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறிய டைகர் உட்ஸ் விபத்தில் காயமடைந்த தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும்  நன்றி தெரிவித்து கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |