மதுரையில் வீட்டின் முன்பாக நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வண்டியூரில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சிறிது வேலையாக வீட்டின் வாசல் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் லஷ்மி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லஷ்மி கத்தி கூச்சலிட்டும் விடாமல் மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து லஷ்மி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.