Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பாய்ந்த சிறுத்தை… பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம், பாராய்ச் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கு வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம்,பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமத்தில் உள்ள அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை சிறுமியை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது. அதை தடுக்கும் முன்பு காட்டுக்குள் போய் மறைந்தது. சிறுமியின் உறவினர்களும், கிராமத்தினரும் வனத்துறையினரும் காட்டுக்குள் தேடுதலில் ஈடுபட்டனர். அதிகாலை 2 மணியில் சிறுமியின் தலை மட்டும் கடிக்கப்பட்டு கிடந்தது.

மீதமுள்ள உடலைக் காணவில்லை. இந்த சம்பவத்துக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு 7 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியது. இதே கிராமத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டிரோன் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமில்லாமல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் யாரும் இரவுகளில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |