புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் நெல்லியடிக்கரை பகுதியில் ராஜபாண்டியன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் புண்ணியவயல் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ராஜபாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜபாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜபாண்டியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.