கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..!!
அதிக மருத்துவம் குணம் நிறைந்த செம்பருத்தி பூவை பற்றி, இப்போதைய இளைஞனர்களுக்கு தெரியாமலேயே இருக்கிறது. மேலும் இந்த செம்பருத்தியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் நமது தலைமுடியை நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னையை சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
இந்த செம்பருத்தியின் பூ மற்றும் இலைகளை வைத்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
செம்பருத்தி பூவில் உள்ள காய்ந்த மொட்டுக்களை எடுத்து, தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், கூந்தலின் இருக்கும் கருமை நிறம் மாறாமல் பாதுகாக்கப்படும்.
உடல் அடிக்கடி சோர்வாக காணப்பட்டால், செம்பருத்தி பூவை உணவிலும் சேர்த்தும் கொள்ளலாம். செம்பருத்தி இலைகளை சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீயாகவோ அருந்தி வந்தால், உடலில் உள்ள ரத்த அழுத்தம் நடுநிலையாகவும், கட்டுக்குள்ளும் வைக்கும். மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைப்பதோடு, உடலில் அதிகஅளவு கொழுப்பு சேர்வதை தடுத்து நிறுத்தும் உதவுகிறது.
இது உடம்புக்கு அதிக குளிர்ச்சியை தருவதோடு, சருமத்தை பொலிவுடன் பளபளப்பாக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
செம்பருத்தி தாவரத்தின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. எந்த வித பக்கவிளைவும், பாதிப்பும் இல்லாத இயற்கையின் கொடை. செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது.
செம்பருத்தியின் இலைகளை அரைத்து தலையில் தேய்ச்சி குளிக்கலாம். தலை முடி உதிராமல் இருக்கும், கருமை நிறம் மாறாமல் காத்துக்கொள்ளும்.
கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் செம்பருத்தியின் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வந்தால் வயிற்றில் இருக்கும் புண் எளிதில் ஆறிவிடும். வெள்ளைப்படுதல் நின்று விடும், ரத்தம் சுத்தமாகும், இதயம் பலம் அடையும்.
100 கிராம் செம்பருத்தி இலைகளை, 400 மில்லி நல்ல எண்ணெயில் போட்டு அந்த கலந்த பாத்திரத்தை ஒரு துணியால் மூடிக் கட்டிவிட வேண்டும்.
செம்பருத்தி பூவை 10 நாள் வெயிலில் காயவைத்து காலை , மாலை என எண்ணெயை நன்கு கலக்கிவிட்டு மூடி வைத்தபின், அந்த எண்ணெயை மட்டும் வடித்து எடுத்து, அதில் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பதப்படுத்தியபின், அந்த தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வந்தால் நீளமான, அழகான, கருமையான கூந்தல் வளரும்.