நாட்டின் மிக முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது.
உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன.
அதன்படி நாட்டின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதனால் 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கித்துறையில் ஏப்ரல் 1 முதல் பல மாற்றங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.