வீட்டுக் கடை நிதி நிறுவனமான hdfc வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.
அவ்வகையில் எச்டிஎப்சி நிறுவனம் தனது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் ஆகஸ்ட் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மற்றும் இனி வீட்டுக் கடன் வாங்குவோர் இரு தரப்பினருக்கும் மாதம் இஎம்ஐ தொகை உயரக்கூடும். ஹெச்டிஎஃப்சி நிறுவனம் மட்டுமல்லாமல் ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளனர்.