Categories
அரசியல்

வீட்டுக் கடன், நகைக் கடன் வட்டி குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நகை கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தங்க நகை மற்றும் சவரன் தங்க பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடன்களுக்கு வட்டி விகிதம் 1.45% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நகை கடன்களுக்கு இனி 7.30% வட்டி விதிக்கப்படும். சவரன் தங்கப் பாத்திரத்தை வைத்து பெறக்கூடிய கடனுக்கு 7.20% வட்டி விதிக்கப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இதனைப் போலவே வருகின்ற பண்டிகை காலத்தை முன்னிட்டு வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வீட்டுக் கடன் வட்டி 6.60%, கார் கடன் வட்டி 7.15%, தனிநபர் கடன் வட்டி 8.95% முதலும் தொடங்குகிறது.
அதுமட்டுமல்லாமல் நகைக்கடன், வீட்டு கடன் உள்ளிட்ட அனைத்து தளங்களுக்கும் பிராசஸிங் கட்டணம் மற்றும் சர்வீஸ் கட்டணம் ஆகியவையும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |