Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு… எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு… மார்ச் 31 வரை மட்டுமே…!!!

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு இனி பிராசஸிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன் வாங்குவதற்கு பிராசஸிங் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இந்த சலுகை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கிடைக்கும். மேலும் மிகக் குறைவான 6.8சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவதாகவும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

பிராசசிங் கட்டணம் என்பது வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் வீட்டுக் கடன் வாங்கும்போது அதன் நடைமுறைகளுக்கான கட்டணமாக பிராஸ்ஸீங் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக இது வாங்கும் கடன் தொகையில் 1%+ ஜிஎஸ்டி வரி என்ற அளவில் இருக்கும். உதாரணமாக நீங்கள் 20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் 20000+ ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டணத்தை தான் எஸ்பிஐ வங்கி தற்போது ரத்து செய்துள்ளது.

Categories

Tech |