Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் EMI குறைப்பது எப்படி…? 5 ஈஸியான வழிமுறைகள் இதோ…!!!!!!

அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுகின்றது. இந்திய ரிசர்வ் வங்கி திடீரென  விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40% உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளுக்கு பின் எச்டிஎப்சி பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ போன்ற சில வங்கிகளில் கடன்கள் விலை உயர்ந்தது. இது வீட்டுக் கடன், வாகன கடன், மாதாந்திர தவணை மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தகைய சூழ்நிலையில் விலை உயர்ந்த கடன்களின் இந்த காலத்தில் உங்கள் இஎம்ஐ குறைக்க விரும்பினால் அதற்கான ஐந்து குறிப்புகள் பற்றி இங்கே காண்போம். கடன் சுமைகளை குறைப்பதற்கான எளிதான வழிமுறை முடிந்தவரை ப்ரீ பேமெண்ட் செலுத்துவதாகும். உங்களின் செலவுகளுக்கு கூடுதலாக சேமிப்பு இருந்தால் அல்லது ஏதாவது ஆதாரம் மூலம் நீங்கள் பெரிய நிதியைப் பெற்றால் உங்களின் கடன் இஎம்ஐயின் ப்ரீ பேமெண்ட் செய்து அதனை குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் ஃப்ரீ பேமெண்ட் செலுத்தும் போதெல்லாம் அந்தத் தொகை நேரடியாக அசல் தொகையிலிருந்து குறைக்கப்படுகின்றது. இந்த வழியில் உங்கள் மாதாந்திர தவணை குறைக்கப்படுகின்றது. இதனை அடுத்து பல நேரங்களில் வீட்டுக் கடன் இஎம்ஐ காரணமாக மாதாந்திர செலவுகள் பாதிக்கப்படுகின்றது. அத்தகைய சூழலில் உங்களுக்கு கூடுதல் வருமானம் அல்லது சேமிப்பு இல்லாமல் போனால் கடனில் கால அளவை அதிகரிப்பதன் மூலமாக நீங்கள் இதனை குறைத்துக் கொள்ளலாம் எனினும் இதனால் அதிக வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டுக் கடன் வங்கி தேர்ந்தெடுக்கும் போது எப்போதும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பாருங்கள் நல்ல டீல் எங்கு கிடைக்கின்றதோ அங்கு கடன் பெற்றுக் கொள்ளலாம்.

சில நேரம் நீங்கள் ஒரு வங்கியில் இருந்து கடன் பெற்று இருப்பீர்கள் ஆனால் மற்றொரு வங்கியில் இருந்து கடன் விகிதம் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் கடனை அந்த வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம் எப்போதும் தலைசிறந்த டீலை தேர்ந்தெடுத்து கடனை உங்களுக்கு ஏற்ற வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்.வங்கிகள் சில நேரங்களில் நல்ல ரீபேமெண்ட் ராக் மற்றும் சிபிஎஸ் கோரை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களில் கூடுதல் நிவாரணம் அளிக்கின்றனர். மேலும் உங்களிடம் நல்ல ரெகார்ட் இருந்தால் முடிந்தவரை குறைந்த வீட்டு கடன் வட்டி விகிதத்தை பெற உங்கள் வங்கியுடன் பேசலாம் இது உங்கள் EMI குறைக்கின்றது. வீட்டுக் கடனை பெறும்போது டவுன் பேமண்ட் முடிந்தவரை அதிகமாக செலுத்த முயற்சி செய்யவும் ஏனென்றால் ரூபாய் 1, 2 லட்சம் அளவிலான அதிக டவுன் பேமெண்ட்டும் இஎம்ஐ 2, 3 ஆயிரம் வரை குறைத்துக் கொள்ளலாம் இது தவிர வட்டியும் மிச்சமாகும்.

Categories

Tech |