பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு போக திட்டமிட்டு இருந்த ரஷ்ய அதிபர் புடினின் மகள் அதிரடியாக வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகளான Maria Vorontsova தன் 37-வது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடுவதற்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரஷ்யாவில் தற்போதையை அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு Maria Vorontsova நாடு திரும்பாமலே போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, புடின் அதிரடி நடவடிக்கையாக தம் மகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் MariaVorontsova தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று புடின் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் உண்மையில் Maria Vorontsova வெளிநாட்டிலிருந்து ரஷ்யா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஏன் தலைமறைவாக திட்டமிட்டார் என்பதற்கும் உரியகாரணம் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது. முன்பே மேற்கத்திய நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு Maria Vorontsova உட்படுத்தப்பட்டிருந்தார். அத்துடன் உக்ரைன் விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புடினின் மகள்கள் எவரும் கருத்துக் கூறவில்லை என்றே கூறப்படுகிறது.