தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா தற்போது காதல் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி .இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நடிகர் அதர்வா இளைய மகன் ஆகாஷ் ஆகும். அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகம் ஆனவர். தற்போது இளைய மகனான ஆகாஷிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகாவிற்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்தநிலையில் அதர்வா ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவர் கோவாவைச்- சேர்ந்தவர். அடுத்த வருட தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தின் சம்மதம் கிடைக்க காத்திருந்தத அதர்வா சம்மதம் கிடைத்ததால் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என கூறுகின்றனர்.