திருநெல்வேலியில் கூலி தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சேதுராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கொத்தனார் தொழிலை செய்து, அவரது குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். இதற்கிடையே அவர் குடும்ப பிரச்சினையின் காரணத்தால் மனமுடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.