Categories
தேசிய செய்திகள்

“வீட்டுல வேலை இருக்கு பாப்பா வா” சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து…. வீடியோ எடுத்த கொடூரன்…!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் 31 வயதான லாரி ஓட்டுனர் ஒருவர் வீட்டில் வேலை இருக்கிறது எனக் கூறி அழைத்துள்ளார். இதனையடுத்து சிறுமி என்றும் பாராமல் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  மேலும் அந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளார். இங்கு நடந்ததை வெளியில் யாரிடமாவது சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அந்த லாரி ஓட்டுனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை சக நண்பர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியைடந்த அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சிறுமியின் தந்தையிடம் இந்த விவரத்தை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுனரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களாக இருந்தாலும் யாரையும் நம்ப கூடாது என்று நம்முடைய பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

Categories

Tech |