சொந்த வீடு என்பது அனைவரது வாழ்விலும் பெரும் கனவு. அப்படி வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கு காப்பீடு வழங்க வேண்டுமா? அதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எப்பொழுதுமே நீங்கள் கடனை பெறுவதற்காக காப்பீடு வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சில பரிந்துரைக்கப்பட்ட காப்பீட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே காப்பீட்டை வாங்குமாறு வங்கிகள் வற்புறுத்த முடியாது .இருப்பினும் வங்கிகள் வீட்டுக் கடனை முடிக்கும்போது சொத்து மற்றும் ஆயுள் காப்பீடு கேட்பது பொதுவான நடைமுறை. அடமானம் வைக்கும் சொத்து மற்றும் கடன் வாங்குபவரின் நிதிநிலை பாதுகாக்க காப்பீடு அவசியமாக உள்ளது. அதிக வட்டி வசூலிக்கும் பல வங்கிகள் காப்பீடு வாங்க விதிவிலக்கு வழங்குகின்றன.
வீடு சேதமடைந்தாலோ அல்லது கடன் வாங்கியவர் திடீரென இறந்தாலோ அதனால் ஏற்படும் இழப்பின் அபாயத்தை சரி செய்ய நீங்கள் காப்பீடு செய்து இருந்தால் மிகவும் நல்லது. கடன் பெறுபவர்கள் தங்களது சொந்த காப்பீட்டை வாங்குவதும் சிறந்த யோசனை. வீட்டுக் காப்பீடு மிகவும் குறைவான தொகையுடன் உள்ளது. இயற்கை சீற்றங்களின் போது வீடு சேதம் அடைந்தால் நீங்கள் காப்பீடு மூலமாக அதனை சரி செய்து கொள்ள முடியும். 1 கோடி ரூபாய் செலவில் கட்டும் ஒரு வீட்டிற்கு வீட்டுக் காப்பீட்டுச் செலவு சுமார் ₹3,500 ஆகும்.