வாடிக்கையாளர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் தருவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பலரும் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் கனரா வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வீடு வாகன, தனிநபர், ஓய்வூதிய கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ செலவுக்காக கனரா வங்கி “கனரா சுரக்ஷா” என்ற தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.25,000 முதல் 5 லட்சம் வரை கடனாகப் பெற முடியும். செப்டம்பர் 30 வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. எளிய ஆவணச் சான்றுகள் அளித்தால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு 18004250018 என்ற எண்ணை அணுகலாம்.