நடிகர் நாக சைதன்யா தந்த 200 கோடி ரூபாயை வேண்டாம் என கூறிய நடிகை சமந்தா.
முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை 2017-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்துக்கு முன்பு நாகசைதன்யா மற்றும் சமந்தா பங்களாவில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா பங்களாவை சமந்தாவுக்கு கொடுத்துவிட்டார்.
மேலும் ஜீவனாம்சமாக நாக சைதன்யாவின் குடும்பத்தினர் 200 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர். இதற்கு சமந்தா, நான் நன்றாக சம்பாதிக்கிறேன். எனக்கு பண பிரச்சனை எதுவும் இல்லை. ஆகையால் எனக்கு இந்த பணம் தேவையில்லை என கூறியுள்ளார். சமந்தா 200 கோடி ரூபாய் வேண்டாம் என சொல்லியதையடுத்து தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகின்றது. விவாகரத்து செய்த பிறகு சமந்தா போட்ட குத்தாட்ட பாடல் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா வாங்கிய ஊதியம் மட்டும் 5 கோடி. இந்நிலையில் நாக சைதன்யாவின் முதல் மனைவி தொடர்பாக சமந்தா பேசிய வீடியோ தற்போது பரவி வருகின்றது.