Categories
மாநில செய்திகள்

வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க… மானிய விலையில் தொகுப்பு…!!!

வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்வது பற்றி கெங்கவல்லி தோட்டக்கலை உதவி இயக்குநா் சாகித்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுப்பில், தென்னை நாா்க்கழிவு, பாலிதின் பை – 6, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட விதைப் பொட்டலம்- 6 உள்ளன.

உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடொ்மாவிரிடி, வேம்பு எண்ணெய் மருந்து, செயல்முறை விளக்கக் குறிப்பு புத்தகம் உள்ளன. ஒரு தொகுப்பின் விலை ரூ. 850, அரசு மானியம் ரூ. 340 வழங்குவதால், பயனாளிகள் ரூ. 510 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். வீட்டில் உள்ள காலி நிலம் அல்லது மாடியில், காய்கறித் தோட்டம் அமைத்து பயன்பெறலாம். இதற்கு, ஆதாா் காா்டு நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒன்று கொடுக்க வேண்டும். தேவைப்படுவோா் முன்பதிவு செய்து பெறலாம். மேலும் விவரம் பெற 8778161142, 7305854769 ஆகிய எண்களில் அழைக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |