Categories
மாநில செய்திகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க இறுதியாண்டு மாணவர்கள் பணியில் ஈடுபடுவர் என்றும், மேலும் 10,000 படுக்கைகளை உருவாக்க தயாராக உள்ளோம் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவித்துள்ளார்.

Categories

Tech |