திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனையை போலி ஆவணங்கள் மூலம் உறவினர்கள் அபகரித்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் 6 மாதங்களாக கோவிலில் வசித்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் வருவாய் துறையினரை போலி ஆவணங்களை தயாரித்து இறந்தவரின் பெயரில் பட்டா மற்றும் மாற்றம் செய்வதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வந்தவாசியை அடுத்த சாலமேடு கிராமத்தை சேர்ந்த வெட்டியானுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு 3 சென்ட் அளவு வீட்டுமனை பட்டா வழங்கியது. அந்த இடத்தில் கட்டிய வீட்டையில் நல்ல பாம்பு புகுந்ததால் வெட்டியான் குடும்பத்தினர் வாடகை வீட்டில் குடியேறினார். இந்தநிலையில் வெட்டியானின் உறவினரான ஏழுமலை என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் போலி ஆவணங்கள் மூலம் வெட்டியானின் வீட்டுமனையை 2011-ரில் உயிரிழந்த தனது தந்தையின் பெயரில் மாற்றம் செய்துள்ளார்.
இதையடுத்து சகோதரர்களிடம் சேர்ந்து பத்திர பதிவும் செய்துள்ளார். மோசடி குறித்து கீழ் குடுங்கனுர் காவல்நிலையத்தில் புகார் அளித்து மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வெட்டியானின் குடும்பத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர். அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனையை பறிகொடுத்தவர்கள் கடந்த 6 மாதங்களாக அதே ஊரில் உள்ள அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.வீட்டு மனையை மீட்டுத்தரக் கோரி வந்தவாசியை வட்டாட்சியரிடம் வெட்டியானின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆவணங்களை தயாரித்து வட்டாட்சியரின் கையெழுத்தும் போலியாக போட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.