உத்திரபிரதேசம் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹிமன்பூர் என்ற பகுதியில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் ஒரு வீட்டின் மேற்கூரை ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது மகன் மற்றும் மகள் என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்பு துறையினர் அவர்களின் சடலங்களை கைப்பற்றினர்.
இதுபற்றி அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி உத்தரவிட்டுள்ளார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.